அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகப் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார். 

திருவண்ணாமலையில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை புரிந்தார். அவருக்கு, கோயிலின் மூத்த சிவாச்சாரியார் பி.டி. ரமேஷ் சால்வை கொடுத்து வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து கோயிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் வழியாக வருகை புரிந்த புரட்சித்தாய் சின்னம்மா, அங்குள்ள நந்தி பகவானை வணங்கி வழிபட்டார்.

Night
Day