எழுத்தின் அளவு: அ+ அ- அ
அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்களில், பொதுமக்களை சந்தித்தார். வடக்கு விஜயநாராயணம் பகுதியில் உள்ள அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார். சின்னம்மாவின் வருகையையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலான அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான இந்தக் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வடக்கு விஜயநாராயணம் பகுதிக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து, சாரட் வண்டி ஒன்றில், புரட்சித்தாய் சின்னம்மாவை கிராம மக்கள், அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு பேரணியாக அழைத்து சென்றனர்.
கோவிலுக்குள் சென்ற சின்னம்மாவை, கோயில் நிர்வாகிகளும், கோவில் பட்டாச்சாரியார்களும் வரவேற்றனர். புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா பெருமாளுக்கு சாத்துவதற்காக பூ, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பட்டாச்சாரியார்களிடம் வழங்கினார்.
பின்னர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புரட்சித்தாய் சின்னம்மா மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தார். உற்சவரை சுற்றி வந்து பக்தியுடன் தரிசனம் செய்தார்.
தரிசனத்துக்கு பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, அனைத்து மக்களும் கரகோஷத்துடன் வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்களை பார்த்து கையசைத்து புரட்சித்தாய் சின்னம்மா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திறந்தவேனில் ஏறி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
கோயில் தரிசனத்திற்கு பின்னர் புரட்சித்தாய் சின்னம்மா, அங்கிருந்து புறப்பட்டபோது, சின்னம்மாவை சந்தித்த கிராமமக்கள், தங்கள் கிராமத்திற்கு வருகைதந்த சின்னம்மாவை மகாராணியாகவும், வேலுநாச்சியாராகவும் பார்ப்பதாகவும், அடுத்தமுறை முதலமைச்சராக இப்பகுதிக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.