எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். புரட்சித்தாய் சின்னம்மா, தாயுள்ளத்தோடும், புன்னகையோடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். சின்னம்மாவிடம் வாழ்த்து பெற வந்தவர்களின் குழந்தைகளுக்கு, சின்னம்மா சாக்லெட் வழங்கி மகிழ்ந்தார்.
மேலும், கிறிஸ்தவ பாதிரியார், புரட்சித்தாய் சின்னம்மாவுக்காக பிரார்த்தனை செய்தார்.
புத்தாண்டையொட்டி பல்வேறு மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.