ஆங்கில பாப் பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி - கடும் போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை நந்தனம் அண்ணா சாலையில் சர்வதேச பாடகர் Ed Sheeran-னின் இசை நிகழ்ச்சியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


உலகப் புகழ்பெற்ற ஆங்கில பாப் பாடகரான Ed Sheeran-னின் live concert நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு Ed Sheeran-னுடன் சில பாடல்களையும் பாடினார். இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து அவரது ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதனால் சென்னை நந்தனம் அண்ணா சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Night
Day