ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,240க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் 640 உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 54 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 780க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல், வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 89 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 89 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day