ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே தங்கம் விலை அதிரடியாக 2 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலை 3 ஆயிரத்து 280 ரூபாய் குறைந்த விற்பனையான நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 51 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 465 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 89 ரூபாய்க்கும், கிலோ 89 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Night
Day