ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 680 ரூபாய் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் 640 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு அதிரடியாக 680 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 695 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 96 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 96 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

Night
Day