ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 சரிந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 58 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்ததால் நகைபிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, நேற்று, 58 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 440 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 102 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day