எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சமாக இன்று 1,480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 69 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 745 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்து 69 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 4ஆயிரத்து 160 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.