ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.55,120-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரம் ரூபாயை தாண்டியது. அதனை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் 440 ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 890 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு 90 ரூபாய்க்கும், கிலோவுக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Night
Day