ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.55,320க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் 720 ரூபாய் உயர்ந்துள்ளது. 
சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் 720 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 100 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Night
Day