ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு - கைதான 8 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 8 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் அண்ணா நகர் துணை ஆணையர் முன்பு சரணடைந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் 8 பேரின் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, 8 பேரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் 8 பேரையும் புழல் மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Night
Day