ஆயுதப்படை மைதானத்தில் 2-ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்ற 2-ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ஆம் நிலை காவலர், தீயணைப்பு வீரர் மற்றும் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 359 பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது. வரும் 10-ம் தேதி வரை இத்தேர்வில் முதல் நாளான இன்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி, உயரம், மார்பளவு மற்றும் ஓட்டப்பந்தயம் போன்றவை நடைபெற்றது. வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற பிற உடல் திறன் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளன. 

அதன்படி, விழுப்புரம் அருகே உள்ள காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற தகுதித் தேர்வில் 827 பேருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது. முதற்கட்ட தேர்வில், சான்றிதழ் சரிபார்த்தல், உடல் எடை, உயரம், மார்பளவு உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன. 

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் 470 தேர்வர்கள் பங்கேற்றனர். முதல் கட்ட தேர்வில் சான்றிதழ் சரிபார்த்தல், உயரம் மற்றும் மார்பு அளத்தல் உள்ளிட்டவை நடைபெற்றன.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 470 பேர் பங்கேற்றர். போலீஸ் பாதுகாப்பு மற்றும் சோதனைக்கு பின்பு தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு உள்ளிட்டவை அளக்கப்பட்டன. 

Night
Day