ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை - உயர்கல்வித்துறை எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தும் வழிகாட்டி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழக 39-வது பட்டமளிப்பு விழாவில் பிரகாஷ் என்பவர் பல்கலைக்கழத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆளுநர் ரவியிடம் மேடையிலேயே புகார் கடிதம் வழங்கினார்.  இதன் எதிரொலியாக, பல்கலைக்கழகங்களின் சில வழிகாட்டி ஆசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சி மாணவர்களை மரியாதையுடன் நடத்தாமல், தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தி அவமானப்படுத்தியது தொடர்பாக அரசின் கவனத்திற்கு புகார் கொண்டு வரப்பட்டது. இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் வழிகாட்டி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் கோபால் அனைத்து பல்கலைகழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Night
Day