ஆருத்ரா தரிசன விழா - ஜன.13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


உலகப் புகழ்பெற்ற திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் ஆலயத்தில் உள்ள மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா அடுத்த மாதம் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். இதனை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார். அதனை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day