ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி - உச்ச நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசு ஆகியவைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஜெய்சுகின் என்ற வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு, ஏற்கனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட சில விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த மனு தேவையற்றது எனத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Night
Day