இஃப்தார் நிகழ்வுக்கு செல்லும் வழியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மக்கள் வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு இஃப்தார் விருந்தளித்தார்.

இஸ்லாமிய பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா ஒவ்வொரு ஆண்டும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வந்தார். அதேபோன்று இந்த ஆண்டும் இஸ்லாமிய பெருமக்களை கவுரவிக்கும் வகையில் அஇஅதிமுக சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள இல்லத்தில் இருந்து கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புறப்பட்டுச் சென்றார்.

முத்துப்பேட்டை செல்லும் வழியில் காசாங்காடு பகுதிக்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பொதுமக்கள் சால்வை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த சிறுவர், சிறுமியருக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

தொடர்ந்து மண்ணங்காடு பகுதிக்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சால்வை கொடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து சின்னம்மாவை வரவேற்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் ’புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க’ என வாழ்த்து முழக்கமிட்டனர். அங்கு திரண்டிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார்.

முத்துப்பேட்டை பகுதிக்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மா ஜாம்புவானோடையில் உள்ள உலக பிரசித்த பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவிற்கு வருகை தந்தார். அப்போது தர்ஹா நிர்வாகிகளும், இஸ்லாமிய பெருமக்களும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு துவாவில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்றார். அப்போது புரட்சித்தாய் சின்னம்மாவிடம் அலங்கார போர்வையை வழங்கிய தர்கா நிர்வாகிகள் சிறப்பு துவா நடத்தினர். அவர்களுடன் புரட்சித்தாய் சின்னம்மாவும் பிரார்த்தனை செய்தார்.

பின்னர் துவா செய்யப்பட்ட அலங்கார போர்வையை, சேக்தாவூது ஆண்டவர் மீது சாற்றியும், மாலை அணிவித்தும் புரட்சித்தாய் சின்னம்மா பிரார்த்தனை செய்தார்.

தொடர்ந்து, இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா நிறைவேற்றிய நலத்திட்டங்களை பட்டியலிட்ட புரட்சித்தாய் சின்னம்மா, இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பின்னர், இஸ்லாமிய சிறுவர் சிறுமியருக்கு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புத்தாடைகள் வழங்கி மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து தர்கா நிர்வாகிகள் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.

இதனையடுத்து தர்கா நிர்வாகிகளுடன் இணைந்து புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதன்பின்னர் இஃப்தார் நோன்பு திறக்கப்பட்டது. இஸ்லாமிய பெருமக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இஃப்தார் விருந்தளித்து கௌரவித்தார்.

அஇஅதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்களும், கழக நிர்வாகிகளும் திரளானோர் கலந்துகொண்டனர். 

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்தபின்னர் தர்காவிலிருந்து புறப்பட்ட புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் சால்வை வழங்கி மரியாதை அளித்தனர். 

இதனையடுத்து, ஷேக்தாவூது ஆண்டவர் தர்கா தலைவர் பாக்கர் அலி இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Night
Day