இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு இளையராஜா நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

சிம்பொனி இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்திய மத்திய இணை அமைச்சல் எல்.முருகனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசைநிகழ்ச்சி மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது. இதையடுத்து திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இசைஞானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இளையராஜாவை சந்தித்து இசைநிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் எல்.முருகன் பதிவிட்டிருந்ததை மேற்கோள் காட்டி, அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி என இளையராஜா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day