எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பொங்கல் தொகுப்பு, பொங்கல் பரிசுத் தொகை எதுவும் இல்லாததால் பொதுமக்கள் விளம்பர அரசின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா ஜனவரி 14 ல் தொடங்குகிறது. பொங்கல் திருவிழாவுக்கு பொங்கல் பரிசாக அரிசி, வெல்லம், சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை மற்றும் இதர பொருட்களான ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை போன்ற 21 பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆனால் இம்முறை இந்த விளம்பர அரசு மக்கள் எதிர்பார்ப்பினை ஒழிக்கும் விதமாக அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பினை மட்டும் வழங்கியதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் பலரும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்தனர். இதில் ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சக்கரையை வைத்து எப்படி பொங்கல் கொண்டாடுவது என்றும் பெண்கள் கேள்வி எழுப்பினர். பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் இல்லாமல் வழங்கி இருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெறவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பை பெற பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து விட்டு சென்றவுடன் அந்த அரங்கமே காலியானது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி காரணமாக அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.