இந்தியா சி​மெண்ட்ஸ் நிர்வாக இயக்‍குநர் ஸ்ரீனிவாசன் திடீர் ராஜினாமா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், நிறுவனத்தின் இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5 சதவீத பங்குகளை மும்பையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், நிறுவனத்தின் இயக்குநர் ரூபா குருநாத் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். ஐபிஎல் கிரிக்‍கெட் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day