இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் நடவடிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மற்றும் கோயம்புத்தூருக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 60 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் வாகனங்கள் மூலம் விரைந்தனர். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பேரில் தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநில நிர்வாகம் கேட்டுகொண்டதின் பேரில் அரக்கோணம் பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 60 பேர் கொண்ட 2 துணை கமாண்டண்ட் ஸ்ரீதர் தலைமையில் வாகனங்கள் முலம் நீலகிரி மற்றும் கோயம்புத்தூருக்கு நவீன கருவிகள் மற்றும் அதிநவீன தொலை தொடர்பு சாதனங்களுடன் விரைந்தன.

Night
Day