எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் நடைபெற்ற இந்திர தனுஷ் விழா கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். இந்த விழாவின் கொண்டாட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
சென்னை கொரட்டூரில் பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்...
இந்த கல்லூரியில் இந்திர தனுஷ் விழா மாபெரும் கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. பெண் முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் கல்லூரியின் துணைத் தலைவர் மரகதமணி, மேலாண்மை இயக்குனர் வருண் கிருஷ்ணா கலந்து கொண்டனர்.
மேலும் செயலர் டாக்டர். ராஜகோபாலன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர். தனலட்சுமி, கல்வித் தலைவர் டாக்டர். மதுமிதா மற்றும் துணை முதல்வர் திருமதி. மங்கை ஆகியோர் விழாவுக்கு தலைமை தாங்கினர்...
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கீதா இளங்கோவன், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேர்மறை& எதிர்மறை கருத்துக்களைக் கூறுதல், விளம்பரம், முக ஓவியம் , கேன்வாஸ் ஓவியம், அறையில் உள்ள பொருள்களைக் கண்டறிதல், இசை கேட்டுப் பாடலைக் கண்டறிதல், நெருப்பில்லாமல் சமைத்தல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன....
கல்லூரியின் மேடையில் இருவர் பாடும் பாட்டு, குழுப் பாடல், பேசாமல் நடிப்பது, குறும் படம் ,பாடலைக் கேட்டு நடனம் ஆடுவது, நகைச்சுவை பேச்சு ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர் மற்றும் முதல்வர் வழங்கினர்.