இந்து முன்னணி நிர்வாகிக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூரில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகிக்கு, நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கோயிலுக்கு அருகில் மது அருந்தியதை தட்டிக் கேட்ட பெண் காவலரிடம், இந்து முன்னணி நிர்வாகி குபேந்திரன் என்பவர் அநாகரீகமாக நடந்து கொண்டதுடன் தகராறு செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குபேந்திரன், பிணை வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எதிர்காலத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அவமரியாதை செய்யும் விதத்தில் நடக்கமாட்டேன் என குபேந்திரன் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து பிணை வழங்கி உத்தரவிட்டார். 

Night
Day