இந்த ஆண்டு நாய்கள் கடித்து இதுவரை 22 பேர் உயிரிழப்பு : பொது சுகாதாரத்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை நாய்க்‍கடியால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்ததாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 42 ஆயிரத்து 782 பேர் நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 22 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பாம்பு கடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 795 ஆகவும் இந்த ஆண்டு தற்போது வரை 7 ஆயிரத்து 310 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பொது சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் கடிப்பதால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த  தீவிர நடவடிக்கை எடுக்‍குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

Night
Day