இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்துச் செய்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

சித்திரை மாதத்தின் முதல் நாளை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று, வேற்றுமைகள் அகன்று, அன்பால் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியான வாழ்வு பெற, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய மொழியாகும்; அன்பே அவனுடை வழியாகும்" என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கருத்திற்கிணங்க, உலகிலேயே தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியை பேசும் மூத்த குடிமக்களான தமிழ்ப்பெருமக்கள், பன்னெடுங்காலமாய் பருவங்களின் சுழற்சியினையும், வான் சாஸ்திர கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து, அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாக சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள் - அவ்வாறு  தொன்றுதொட்டு இருந்து வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டதைச் சரி செய்து, முன்னோர் வகுத்த வழிமுறையின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாளாய் தொடரும் என்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் நிலைநாட்டியதை இத்தருணத்தில் எண்ணி மகிழ்வதாக புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
 
காலங்கள் பல மாறினாலும், கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய தொன்மையான மொழியாக விளங்கும் தமிழ் மொழியை தங்கள் உயிர்மூச்சாக எண்ணி வாழ்ந்து வரும் தமிழக மக்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்திடும்  இப்புத்தாண்டில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று, வேற்றுமைகள் அகன்று, அன்பால் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியான வாழ்வு பெற, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day