எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை மேலும் உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.
இதனிடையே இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இயல்பான வெப்ப நிலையில் இருந்து, இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்றும் கணித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.