எழுத்தின் அளவு: அ+ அ- அ
இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கிறது - இயக்குநர் பாலச்சந்திரன்
மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் - இயக்குநர் பாலச்சந்திரன்
ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது -
ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது
சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு
எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு
புயல் கரையைக் கடக்கும் போது திருவள்ளூர் முதல் மயிலாடுதுறை வரை பலத்த காற்று வீசும் -
வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன்
புயல் கரையைக் கடப்பது என்பது சில மணி நேரங்கள் ஆகும்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட 12 மாவட்டங்களுக்கு நாளை மழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 2-ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 2-ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரையில் கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 3-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 3-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மீனவர்களுக்கான எச்சரிக்கை - வட தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்