தமிழகம்
2025-ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஏற்கனவே மக்களை வதைத்து வரும் நிலையில் கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 21-ம் தேதி முதல் வைகாசி 15-ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். அந்தவகையில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திர கத்திரி வெயில் அடிக்கப் போகிறது. பொதுவாக ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் நடப்பாண்டு பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கத்துடன் வெப்ப அலையும் வீசுவதால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சேலம், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், கரூர், திருத்தணி போன்ற மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சில நேரங்களில் 110 டிகிரி வரை பதிவாகி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் மற்றும் உதகையிலும் வெயிலின் தாக்கம் இருப்பது கோடையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...