எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை உச்சத்தை தொடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடல் சார்ந்த அலைகள் சாதகமற்ற நிலையில் காணப்படுவதாலும், காற்றின் போக்கில் நிலவும் வேகமாறுபாடு மற்றும் வறண்ட கிழக்கு காற்றின் வருகை காரணமாக இன்று முதல் வரும் 31ம் தேதி வரையிலான 5 நாட்கள் தமிழகத்தில் வெப்பம் தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெப்பநிலை 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் நிலவும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அத்தியவாசிய தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.