இன்று முதல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில்  நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு  திசையில் நகர்ந்து அதற்கடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனிடையே தென்மேற்கு மற்றும்  அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதனால் இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Night
Day