எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா உள் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நீடித்து வரும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வரும் 12ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பு எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிறைய எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என தெரிவித்து ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்ததுடன் சென்னை உள்ளிட்ட இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.