எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளனது.
இதேபோன்று கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை, கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவவித்துள்ளது. எனவே, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.