எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக அஇஅதிமுக பொது செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையை சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.