இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை - மகன் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருச்சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.

கொங்கராம்பூண்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான ஏழுமலை சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மகன் தயாநிதியை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வி. சாலை என்ற இடத்தில் வந்தபோது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day