இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிறக்க போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிந்து கொள்ள முடிவு செய்த யூடியூபர் இர்பான், தூபாயில் அதற்கான பரிசோதனையை மேற்கொண்டார். அதில், ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என தெரியவந்தது. இதனையடுத்து, அவர் தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து சென்னையில் Gender reveal party என்று பெயரில் விழா ஒன்றை நடத்தியுள்ளார். அதனை, தனது யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றியுள்ள நிலையில் அது டிரெண்டானது. இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்ள தடை இருக்கும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்து நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

varient
Night
Day