எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினருமான, இலக்கியச்செல்வர் திரு. குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான, இலக்கியச்செல்வர் திரு. குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தமிழ் பற்றாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளருமான குமரி அனந்தன் புரட்சித்தலைவி அம்மா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் கருப்பு தினமான 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி புரட்சித்தலைவி அம்மா அவர்களை சட்டமன்றத்தில் திமுகவினர் தாக்கிய அன்று,
மாற்றுக் கட்சியை சேர்ந்த உறுப்பினராக இருந்தபோதும் அம்மா அவர்களுக்கு, திரு.குமரி அனந்தன் மிகவும் உறுதுணையாக இருந்ததை இந்நேரத்தில் எண்ணிப் பார்ப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்களை இழந்து வாடும் அவருடைய மகளும், முன்னாள் ஆளுநருமான சகோதரி தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,
நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.