இலங்கை அரசைக் கண்டித்து 2-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையில் தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 4ம் தேதி 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களில் இரண்டு மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் மற்றொரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். 

Night
Day