இல்லத் திருமண அழைப்பிதழை சின்னம்மாவிடம் வழங்கி வாழ்த்துப் பெற்ற கழக நிர்வாகி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக நிர்வாகியுமான மொளச்சூர் பெருமாள், குடும்பத்துடன் நேரில் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக நிர்வாகியுமான மொளச்சூர் பெருமாள், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை குடும்பத்துடன் நேரில் சந்தித்தார். அப்போது, தனது மகன் பெ. அரவிந்தின் திருமண அழைப்பிதழை புரட்சித்தாய் சின்னம்மாவிடம்  வழங்கி அவர் வாழ்த்துப் பெற்றார். 

அதனை தொடர்ந்து மணமக்களுக்கான திருமண உடையை, கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் மணமகனின் பெற்றோர் காண்பித்து ஆசீர்வாதம் பெற்றனர்.

பின்னர் மணமகனின் குடும்பத்தினர் அனைவரும் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Night
Day