இளைஞருக்கு எமனாக மாறிய ஜி.எஸ்.டி. அதிகாரி கார்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணாநகரில் ஜிஎஸ்டி அதிகாரியின் கார் கதவை திறந்த போது நிகழ்ந்த விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 


6-வது நிழற்சாலையில் indirect taxes and customs என்ற பெயர் பலகையோடு உள்ள காரின் முன் பக்க கதவு திடீரென திறந்த போது பின்னால் சைக்கிளில் வந்த நபர் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் அவர் தலை மீது ஏறியதில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காரை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

Night
Day