ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் இறந்ததையடுத்து, கடந்த 5-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர், நாதக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 46 பேர் போட்டியிட்டனர். இதில் 67 புள்ளி 97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகின. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன. இன்று பிற்பகலுக்குள் இடைத்தேர்தல் முடிவு முழுமையாகத் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day