ஈரோடு: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். மூணாம்பள்ளி இந்திரநகர் பகுதியில் 200-க்கும் மேற்ப்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில், முறையான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என துறைசார்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு வழங்கியுள்ளனா். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கோபி- நம்பியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Night
Day