ஈரோடு: ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய நடத்துநர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணை பேருந்து நடத்துனர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. ஈரோட்டில் இருந்து மேட்டூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் எதிர்பாரத விதமாக ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அந்த சமயத்தில் பேருந்து நடத்துனர் துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை பத்திரமாக மீட்டார். இதுதொடர்பான, வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், பேருந்து நடத்துனருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Night
Day