ஈரோடு: மத்திய அரசை கண்டித்து ஜவுளி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வணிக நிலுவை கடன்களை விரைந்து வசூலிக்க ஏதுவாக, மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. மார்ச் 31ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் இந்த புதிய சட்டத்தில், இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேல் சென்றிருந்தால் அதனை வருமானமாக கருதப்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day