ஈரோட்டில் மாயமான 5 பள்ளி மாணவிகள் சமயபுரத்தில் பத்திரமாக மீட்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம், பவானியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாயமான 5மாணவிகள் திருச்சியில் மீட்கப்பட்டனர். 

பவானி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகள் பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாயமாகியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவிகளில் செல்போன் சிக்னலை வைத்து மாணவிகள் திருச்சியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, மாணவிகளை மீட்க திருச்சிக்கு விரைந்த போலீசார் சமயபுரத்தில் தங்கி இருந்த மாணவிகளை மீட்டு பவானிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day