எழுத்தின் அளவு: அ+ அ- அ
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வெ.கி.ச. இளங்கோவனின் உடல், அரசு மரியாதையுடன் முகலிவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கு கடந்த மாதம் இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நுரையீரலில் சளி தொற்று அதிமாகி, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில், ஈ.வெ.கி.ச. இளங்கோவனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, முகலிவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.