உடன்பிறப்புகளால் தீக்கிரையான சாமியானா பந்தல்... அமைச்சர் விழாவில் அலறியடித்து ஓடிய பெண்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே, அமைச்சரை வரவேற்க திமுக உடன்பிறப்புகள் வெடித்த பட்டாசில் இருந்து கிளம்பிய தீப்பொறியால் சாமியானா பந்தல் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பந்தலுக்கு கீழ் அமர்ந்திருந்து பெண்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறியது. 

திருச்சி மாவட்டம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழாவில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்பதற்காக திமுக உடன்பிறப்புகள் தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

அதன் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். பட்டாசிலிருந்து கிளம்பிய தீப்பொறி, அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தல் மீது பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால் விழாவிற்கு வந்திருந்த பெண்கள் செய்வதறியாது தகைத்த  அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

சாமியானா பந்தலில் தீப்பிடித்ததை கண்ட திமுக உடன் பிறப்புகள், குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொண்டு, தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், முறையான ஏற்பாடின்றி, மரத்தின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

Night
Day