உதகையில் வீசிய சூறைக்‍காற்றால் மரங்கள் விழுந்து போக்‍குவரத்து பாதிப்பு !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையுடன் வீசிய சூறை காற்றால் ஏராளமான மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் குறிப்பாக கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ததால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல் சாரல் மழையுடன் சூறை காற்றும் வீசியதால் உதகை எட்டின்ஸ் சாலை, ரோஜா பூங்கா, படகு இல்லம், பர்ன் ஹில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்கள் சாலைகளிலும், கட்டிடங்கள் மற்றும்
, வாகனங்கள் மீதும் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
மேலும் மின் கம்பிகள், மின் டிரான்ஸ்பார்மர்கள் மீது மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றி வருகின்றனர். 

Night
Day