உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் 126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களை மலர் மாடத்தில் அடுக்கும் பணிகள் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் எதிர்வரும் மே மாதம் 17-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை 126-வது மலர் கண்காட்சி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 262 ரகத்தைச் சேர்ந்த டேலியா, சால்வியா, கேண்டிடப்ட், ஜெனியா, பால்சம், அஜிரேட்டா உள்ளிட்ட மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது. தற்போது பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் 15 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day