உதகை கனமழை - படகு சவாரி நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் போக்‍குவரத்து துண்டிக்‍கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அருவிகளில் நீராட சுற்றுலாப் பயணிகளுக்‍கு அனுமதி மறுக்‍கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கனமழை பெய்ததால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் ஹில் குரோவ் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யபட்டு நேற்று இயக்கப்ட்ட நிலையில், தற்போது ரயில் தண்டவாளத்தில் மீண்டும் பாறைகள் சரிந்து விழுந்ததால், இன்று மறுபடியும் மலைரயில் போக்‍குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day