உதகை - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக ஊட்டி அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் கனமழை காரணமாக ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே மலைரயில் பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனிடையே இன்று காலை வழக்கம் போல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 184 பயணிகளுடன் உற்சாகமாக புறப்பட்டுச் சென்ற மலை ரயில் தண்வாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் கல்லாறு ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மேட்டுபாளையத்திற்கே ரயில் திரும்பி சென்றதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

Night
Day